கடந்த ஐ.பி.எல் போட்டியின்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு மைதானத்திலேயே விராட் கோலியும், ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக்கும் மோதிக்கொண்ட சம்பவம் மறக்கமுடியாத சம்பவமாக அமைந்தது. இந்த சூழலில் நேற்றைய உலகக்கோப்பை போட்டியில் விராட் கோலியும், ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக்கும் ஒருவரை, ஒருவர் ஆரத்தழுவி நண்பர்களாக மாறிய இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஐ.பி.எல் தொடரில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் விளையாடிய போட்டியில், நவீன் உல் ஹக் பேட்டிங் செய்து கொண்டிருக்க, கோலி […]