முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியனின் சிலையை சென்னையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன் உருவச் சிலையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் நாவலர் நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் இடைக்கால முதலமைச்சராக நாவலர் நெடுஞ்செழியன் 3 முறை பதவி வகித்துள்ளார். அதிமுக அவைத்தலைவராகவும் இருந்துள்ளார். எனவே, நாவலர் நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்படும் […]