‘மரம் வளர்ப்போம் வாங்க’ என்ற அமைப்பினர் விவேக்கின் மறைவை அடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மதுரை தனக்கன்குளம் பகுதியில் விவேக்கின் உருவப்படத்திற்கு மலர் தூவி, மரக்கன்றுகளை வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இவர் இன்று காலை 4:30 மணி அளவில் மண்ணை விட்டு பிரிந்தார். இவருக்கு அரசியல் பிரபலங்களும், திரை உலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது பூதவுடல் […]