சிறு பட்ஜெட் படங்களுக்கு டிக்கெட் விலையைக் குறைக்க தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர் சங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த நவம்பர் 2023 முதல், திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் வருவது குறைந்து வருவது குறித்து தங்களின் குரல் பதிவை கேட்டோம். இந்த விஷயம் தயாரிப்பாளர்களையும் மிகவும் பாதித்து வருகிறது. சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் திரைப்படங்களுக்கு பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு வரவழைப்பது நம் இருவரின் பொறுப்பாகும். இதை […]
கடந்த பிப்ரவரி 2022ஆம் ஆண்டு உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலானது சுமார் இரண்டு வருடங்கள் நெருங்கியும் இன்னும் ஒரு சில இடங்களில் தாக்குதல் தொடர்பான பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த போர் பதற்றம் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சர்வதேச நாடுகளுக்கு வேண்டுகோளை முன்வைத்துள்ளார். அக்டோபர் 7 தாக்குதலில் ‘பாலஸ்தீன ஐநா’ அதிகாரிகளுக்கு தொடர்பு.? இஸ்ரேல் கடும் குற்றசாட்டு.! சர்வதேச அளவில் 3ஆம் உலகப்போர் வர வாய்ப்புள்ளது. ரஸ்யா, நோட்டோ […]
உக்ரைன் போரை நிறுத்த புதின் விரும்பினால், அவருடன் பேசத் தயார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். கடந்த 10 மாதங்களாக உக்ரைனில் போரை நடத்தி வரும் ரஷ்யா தற்போது உக்ரைனுடனான போரை நிறுத்தும் வழியை விரும்பினால் ரஷ்ய அதிபர் புதினுடன் பேசத்தயார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். போர் ஆரம்பித்து கிட்டத்தட்ட 10 மாதங்களாகி முதன்முறையாக அமெரிக்கா போரை நிறுத்த புதினுடன் பேசுவதாக கூறியிருக்கிறது. செய்தி கூட்டு மாநாட்டில் பங்கேற்ற பைடன் […]
போலந்தில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல், ரஷ்யா அனுப்பியிருக்க வாய்ப்பில்லை என்கிறார் ஜோ பைடன். ரஷ்யா தனது ஏவுகணைகள் போலந்து எல்லையைத் தாக்கியதை மறுத்துள்ளது, போலந்து ஊடகங்கள் மற்றும் அதிகாரிகளின் அறிக்கைகள்… நிலைமையை வேண்டுமென்றே எங்கள் பக்கம் திருப்ப முயற்சிக்கின்றனர் என்று கூறியுள்ளது. போலந்தின் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இந்தோனேசியாவின் பாலியில், உலகத் தலைவர்களின் அவசரக் கூட்டத்தில் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் கலந்துகொண்டனர். […]
உக்ரைனை, நேட்டோ(Nato) வில் சேர்த்தால் மூன்றாவது உலகப்போரை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. நேட்டோ (North Atlantic Treaty Organization) வில், உக்ரைனை அனுமதிப்பது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைச் செயலாளர் அலெக்சாண்டர் வெனெடிக்டோவ் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கும் அது நன்றாக தெரியும், அதற்காகத்தான் அவர்கள் சலசலப்பை உண்டாக்கி தங்கள் மீது கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனின் 4 ஆக்கிரமிக்கப்பட்ட […]
உக்ரைன் நேட்டோ இராணுவக் கூட்டணியின் விரைவான உறுப்பினர் பதவிக்கு முறைப்படி விண்ணப்பித்து வருவதாகவும், மாஸ்கோவுடன் பேச்சுவார்த்தைக்கு கிய்வ் தயாராக இருப்பதாகவும், ஆனால் அதிபர் விளாடிமிர் புட்டினுடன் அல்ல என்றும் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். நாங்கள் ஏற்கனவே நடைமுறை கூட்டாளிகள்.”உண்மையில்,கூட்டணி தரநிலைகளுடன் இணக்கத்தன்மையை நாங்கள் ஏற்கனவே நிரூபித்துள்ளோம்.” உக்ரைன் விரைவான நடைமுறை மூலம் அதை உறுதிப்படுத்துவதற்கு விண்ணப்பிக்கிறது,” என்று அவர் கூறினார்.அனைத்து 30 நேட்டோ நட்பு நாடுகளும் நாடு சேர ஒப்புக் கொள்ள வேண்டும்.
உக்ரைன் – ரஷ்யா மோதலுக்கு மத்தியில் போலாந்து செல்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். உக்ரைன் – ரஷ்யா மோதலுக்கு இடையில் அடுத்த வாரம் போலாந்து செல்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். அதாவது, மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் நெருக்கடியை தூண்டியதும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கான சர்வதேச பதிலைப் பற்றி விவாதிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மார்ச் 25-ஆம் தேதி போலந்துக்குச் செல்கிறார். அமெரிக்க அதிபர் ஜோ பிடன் போலந்து நாட்டின் தலைநகர் […]
நார்வேயில் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) போர் பயிற்சியின் போது விமான விபத்தில் நான்கு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர் இன்று இந்தத் தகவலைத் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை இரவு நடந்த இந்த விபத்தில் நான்கு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததாக ஜோனாஸ் ஸ்டோர் ட்வீட் செய்துள்ளார். அவர் ட்விட்டரில், ‘இந்த அமெரிக்க வீரர்கள் நேட்டோவின் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என […]
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை விரும்பாத ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும்,உக்ரைனின் முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றி வருகிறது. எனினும்,ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.இதனிடையே,ரஷ்யா போர் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் கூறி வந்தாலும்,அதற்கு செவி சாய்க்காமல் தொடர்ந்து போரிட்டு வருகிறது. இந்நிலையில்,நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையும் தனது மனநிலை மாறிவிட்டதாக அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக ஏபிசி […]
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப்படும் என்று நேட்டோ கூட்டமைப்பு அறிவிப்பிற்கு ரஷ்யா கடும் கண்டனம். உக்ரைன் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வந்த ரஷ்யா, இன்று தாக்குதலை குறைத்துள்ளது என தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், தலைநகர் கீவ்-ஐ கைப்பற்ற மீண்டும் ரஷ்யா கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருவதாக தற்போது தகவல் வெளியாகியிருந்தது. அதன்படி, உக்ரைன் தலைநகர் கிவ்-ல் மீண்டும் அபாய ஒலி எழுப்பப்பட்டு வருகிறது, வான்வெளி தாக்குதலுக்கான எச்சரிக்கை என தகவல் கூறப்படுகிறது. மேலும், ரஷ்ய படைகள் உக்ரைன் […]
நோட்டோ கூட்டமைப்பில் உள்ள நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்து வருகின்றன என நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்தார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை கடுமையாக கண்டிக்கிறோம். ரஷ்யா உடனடியாக உக்ரைனில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொள்கிறோம். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஐரோப்பிய கண்டத்தில் அமைதியை சீர்குலைத்துவிட்டது என நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டுக்குள் தங்களது படைகளை அனுப்பும் எந்த திட்டம் தற்பொழுது வரை இல்லை. […]