புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து , பொதுத்துறை பங்கு விற்பனையை கைவிட வேண்டும் என்ற 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஊழியர்கள் இன்றும் நாளையும், மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் , போக்குவரத்து கழக தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள் முழுமையாக பங்கேற்குமாறு, ஐ.என்.டி.யு.சி, சி.ஐ.டி.யு உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலைநிறுத்த போராட்ட்டத்தால் மத்திய அரசு ஊழியர்கள் 15 லட்சம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகின்றது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய முழுவதும் வரும் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் ஈடுபட்டால் அவர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அரசு ஊழியர்களை எச்சரித்துள்ளது. தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் […]