தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நேற்று முன்தினம் துவங்கி இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பான தீர்மானம், அரியலூர் பட்டாசு அலை விபத்து தொடர்பான விவாதம், 39 இஸ்லாமிய கைதிகள் விடுதலை தொடர்பான விவாதம் என பரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்கள் போலவே இன்றும் தொகுதி வாரியாக அந்தந்த தொகுதி பிரச்சனைகள் மற்றும் பொது பிரச்சனைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பி […]
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக இலகுரக வாகனங்கள் இரவில் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இரவுநேர வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். இதுதொடர்பாக வழக்கு நீதிமன்றத்திலும் நடைபெற்றது. இந்த நிலையில், சத்தியமங்கலம் வனப்பகுதி சாலையில் இலகுரக வாகனங்கள் இரவிலும் செல்லலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து, அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, கோவை – பெங்களூரு சாலையில் […]
மதுரை, சேலம், மற்றும் ஆந்திர மாநிலம் தடாவை சென்னையுடன் இணைக்கும் 14 சுங்க சாவடிகளில் கட்டணம் பத்து சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது மேலும் இது அடுத்த மாதம் செப்டம்பர் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. இது குறித்து வரும் நாட்களில் மத்திய போக்குவரத்து அமைச்சகம் விளம்பரங்களை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. கார்களுக்கு 10 சதவீத கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. லாரிகள், பேருந்துகள் போன்ற கனரக வாகனங்களுக்கு 6 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படக்கூடும்.சாலை பராமரிப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்தவே […]