காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் காந்தி தொடர்புடைய நிறுவனத்தின் 751 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட நாளிதழ் தான் நேஷனல் ஹெரால்டு. 1937-ஆம் ஆண்டு அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (AJL) என்னும் நிறுவனத்தைத் தொடங்கிய முன்னாள் பிரதமர் நேரு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை அதில் பங்குதாரர் ஆக்கினார். இந்நிறுவனம் எந்தவொரு குறிப்பிட்ட நபருக்கும் சொந்தமானது அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 1942-ஆம் நேஷனல் […]
டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்ட் அலுவலகத்திற்கு சீல் வைத்தது அமலாக்கத்துறை. டெல்லியில் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு அமலாக்க இயக்குனரகம் சீல் வைத்தது. முன் அனுமதியின்றி வளாகத்தை திறக்கக் கூடாது என்றும் யாரும் உள்ளே வரக்கூடாது எனவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் நேற்று சோதனை நடத்திய நிலையில், இன்று சீல் வைக்கப்பட்டது. நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை தொடர்ந்து டெல்லியில் உள்ள ஏஐசிசி தலைமையகத்திற்கு வெளியே கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நேஷனல் ஹெரால்டு வழக்கு […]
நேஷனல் ஹெரால்டு வழக்கில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி,3 நாளாக ஆஜரான நிலையில்,இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக தொடுக்கப்பட்டுள்ளதாக கூறி, காங்கிரஸ் கட்சியினர் பல இடங்களில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையில்,ஜூன் 15 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் டெல்லி காவல்துறை தன்னை கிரிமினல் போல கைது செய்து ஆடையை கிழித்ததாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி குற்றம் சாட்டியிருந்தார். Art Artist(Delhi Police) pic.twitter.com/k67Uw61srE — Jothimani (@jothims) June 16, 2022 […]
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்காக ஆஜராக கூடுதல் அவகாசம் கேட்கும் ராகுல் காந்தி. நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் டெல்லி அமலாக்கத்துறையினர் இதுவரை 3 நாட்கள் விசாரணை நடத்தினர். மொத்தமாக 28 மணி நேரம் அமலாக்கத்துறை, ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்திய நிலையில், வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறை விசாரணைக்காக ஆஜராக கூடுதல் அவகாசம் அளிக்குமாறு கோரி ராகுல் காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். […]
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை 3வது நாளாக விசாரணை. டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி 3வது நாளாக இன்று ஆஜராகியுள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை அண்மையில் நோட்டீஸ் அனுப்பியது. சோனியா காந்திக்கு கொரோனா காரணமாக மருத்துவமனையில் இருப்பதால், இந்த வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். இந்த […]
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு மீண்டும் சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வரும் 13-ஆம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஜூன் 2-ஆம் தேதி நேற்று ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு சம்மன் அளிக்கப்பட்டியிருந்தது. வெளிநாட்டு பயணம் காரணமாக நேற்றைய விசாரணைக்கு […]