புதிய கல்வி கொள்கை மீதான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நாடு முழுவதும் அனைத்து இடங்களுக்கும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 9 ம் தேதி மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளும் கூட்டமும் நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. தற்போது தமிழக, புதுச்சேரி எம்பிக்களுடன், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ஆலோசனை செய்துவருகிறார். இந்த கூட்டத்தில் அதிமுக,திமுக மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் பங்கேற்று உள்ளனர்.