தூத்துக்குடியில்இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகிறது தேசிய மனித உரிமை ஆணையம்..!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகள், இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடிக்கு நேற்று மாலை வந்த தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர் புபுல் புட்டா பிரசாத் தலைமையிலான 5 பேர் குழுவினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டனர். பின்னர், ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ்குமார், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரட்கார், மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா ஆகியோரிடம் சம்பவம் […]