காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று காஞ்சிபுரம் மாவட்டம் பூஞ்சேரியில் நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் விஜய் , ஆதவ் அர்ஜுனா, ஆனந்த் உள்ளிட்ட கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். பிரபல தேர்தல் வியூகவியலாளர் பிரசாந்த் கிஷோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்தும், தவெகவின் அடுத்தகட்ட வேலைகள் […]
சென்னை : தேசிய கல்வி கொள்கை 2020 பற்றிய பேச்சுக்கள் தற்போது தமிழ்நாட்டில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான், தேசிய கல்விக்கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு கல்விக்கான நிதி தர முடியவில்லை என்பது போல பேசியது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பாஜக தவிர்த்து திமுக, அதிமுக, காங்கிரஸ், நாதக, தவெக என பல்வேறு கட்சியினரும் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். திமுக சார்பில் இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் […]
சென்னை : மத்திய கல்வி கொள்கையின் PM Shri திட்டத்தில் தமிழ்நாடு இணைய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்துவதுவதாக தமிழக அரசு மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் மத்திய அரசை குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்து வெளியான செய்தி தகவலின்படி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடி நிதியை மத்திய அரசு, […]
சென்னை : தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு தரவேண்டிய நிதியை தர மறுக்கிறது என்றும், தேசிய மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் நிதி அளிப்போம் என மத்திய அமைச்சர் கூறியதாகவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அவர் இது குறித்து மேலும் கூறுகையில், ” தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு நிலுவை இருக்கிறது. மத்திய அரசிடம் இருந்து வரக்கூடிய ரூ.2,151 கோடி தொகை நிலுவையில் இருக்கிறது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்படுகிறது. மத்திய அரசு குறிப்பிடும் […]
பொதுப்பட்டியலில் இருக்கும் கல்விக்கு , இந்தியா முழுக்க ஒரே மாதிரியான பள்ளி கல்வி முறை கொண்டுவரும்படியாக தேசிய கல்வி கொள்கை 2020 கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் தனித்தனி குழு அமைத்து அதன் மூலம் பல்வேறு பாடத்திட்ட சீர்திருத்தங்கள் கோரப்பட்டுள்ளது. இந்திய புதிய தேசிய கல்வி கொள்கை 2020ஆனது அடுத்த ஆண்டு இந்தியா முழுக்க அமலுக்கு வரும் என கூறப்படுகிறது. 2024 ஜூலையில் தேசிய கல்வி கொள்கை வெளியிடப்பட உள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் […]