ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக(National Convenor) டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக (National Convenor) டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல,கட்சியின் செயலாளராக பங்கஜ் குப்தா மற்றும் பொருளாளராக என்.டி.குப்தா மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.