டெல்லி : ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்து சட்டமன்ற கூட்டத் தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. இதற்கு பாஜக எம்எல்ஏக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இது வாக்குவாதமாக முற்றி அதன்பின் கைகலப்பு, தள்ளு முள்ளாக மாறியது. இதனால், சபாநாயகர் அப்துல் ரஹீம் ராதர் நேற்று முழுவதும் அவையை ஒத்தி வைத்தார். இந்த நிலையில் […]
டெல்லி : இந்திய சுதந்திரத்திற்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370ஆனது கடந்த 2019இல் ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக அவை பிரிக்கப்பட்டது. இந்த சட்டப்பிரிவு நீக்கத்திற்கு பிறகு அண்மையில் தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய மாநாட்டு கட்சி – காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்து, உமர் அப்துல்லா முதலமைச்சரானார். அப்போது முதலே […]
டெல்லி : அக்டோபர் 31, 2019இல் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது மத்திய பாஜக அரசு. அதற்கு பிறகு ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் சட்டசபையுள்ள தனி யூனியன் பிரதேசமாகவும் , லடாக் சட்டசபை அல்லாத தனி யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டது. சுந்திரத்திற்கு பிறகு, மன்னர் ராஜா ஹரி சிங் விருப்பத்தின் பெயரில் ஜம்மு காஷ்மீரில் அமலில் இருந்த சிறப்பு சலுகைகள் அனைத்தும் 2019இல் ரத்து செய்யபட்டன. அதற்கு பிறகு அங்கு […]
டெல்லி : ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளுக்கும் கடந்த செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதியென 3 கட்டங்களாக நடைபெற்று முடிந்தன. காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி, பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தேர்தலை சந்தித்தன. இன்று காலை 8 முதல் வெளியான வாக்கு எண்ணிக்கை முன்னிலை […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா செய்தியாளர் சந்திப்பின்போது அறிவித்துள்ளார். வரும் மக்களவை தேர்தலில் பாஜக வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் சுமார் 25க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாகிய இந்தியா கூட்டணியில் தற்போது அடுத்தடுத்து பெரும் அடி விழுந்து வருகிறது. தொகுதி பங்கீட்டில் உடன்பாடு இல்லை, அதிருப்தி, கருத்து வேறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒவ்வொரு கட்சியும் தொடர்ந்து […]