தமிழக காவல்துறையில் பல்வேறு உயர் பதவிகளை வகித்த ஆர்.நடராஜ், பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து, கடந்த 2016ம் ஆண்டு சென்னை மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த சூழலில் வாட்ஸ் அப் குழு ஒன்றில் இந்துக்கள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து பொய்யான செய்தி பரப்பியதாக முன்னாள் காவல்துறை தலைவர் நடராஜ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், ஒரு ஓய்வுபெற்ற […]