கடலூர்: இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மே 31-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘கருடன்’. இந்நிலையில், கடலூரில் கருடன் படம் பார்க்க வந்த 20க்கும் மேற்பட்ட நாடோடி பழங்குடி மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடலூர் மாவட்டம் அண்ணா பாலம் அருகே உள்ள ‘நியூ சினிமா’ திரையரங்க நிர்வாகம் டிக்கெட் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அந்த நாடோடி பழங்குடி மக்கள் […]