சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பா.ரஞ்சித் இயக்கி இருந்த திரைப்படம் காலா. இந்த படத்தில் மிரட்டல் வில்லனாக அசால்டாக நடித்து இருப்பார் நானா படேகர். இவர் பாலிவுட்டில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராவார். இவர் தற்போது மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார். ஜெயம் ரவி நடிக்கும் 26வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தினை என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்களை இயக்கிய அஹமத் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ஜன கன மன என தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. […]
நானா பட்டேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த 2008-ல் ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ இந்தி திரைப்படத்துக்கான பாடல் காட்சி ஒத்திகையின்போது, நடிகர் நானா படேகர் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என அண்மையில் பரபரப்புப் புகார் கூறினார். பாலியல் தொந்தரவைத் தொடர்ந்து படப்பிடிப்புத் தளத்தை விட்டு வெளியேறிய தன்னை அரசியல் கட்சி குண்டர்கள் மூலம் நானா படேகர் மிரட்டினார் என்றும் அவர் கூறினார். அத்துடன் 2005-ல் […]