சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஐதராபாத் சென்ற சார்மினார் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை நம்பள்ளி ரயில் நிலையம் அருகே ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டதில், 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. மீட்புப்பணி விரைவாக நடைபெற்று வருகிறது. தடம் புரண்டதற்கான காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை. சமீபகாலமாக அடுத்தடுத்து ஏற்படும் ரயில் விபத்தால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் மன்னனை காணவில்லை.. ஈக்வடாரில் […]