சென்னை மாநகர பகுதிகளில் நடப்பாண்டில் 5447 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 5,447 மாடுகள் பிடிக்கப்பட்டு, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரிந்த மாடுகள் மாநகராட்சி பொதுசுகாதாரத் துறையினரால் பிடிக்கப்பட்டது என்றும் பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகளுக்கு ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது. மேலும், அக்.1ம் தேதி […]