தமிழகத்தையே சில தினங்களாக உலுக்கிய சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை. கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர் சுமார் 20க்கும் நபர்கள் கொண்ட கும்பல். இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது. பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபால் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், பொள்ளாச்சி சம்பவத்தில் பல அரசியல்வாதிகளுக்கு […]
நக்கீரன் கோபாலுக்கு எதிரான வழக்கில் வரும் 21-ம் தேதி வரை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த முன்னாள் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் நக்கீரன் பத்திரிகையில் தொடர்ந்து செய்தி கட்டுரைகள் வெளியானது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரையடுத்து நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.இந்த வழக்கில் நக்கீரன் இணையாசிரியர் லெனின் உள்ளிட்ட 35 ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தங்களுக்கு […]
நக்கீரன் கோபால் கவர்னரை பற்றி தவறாக எழுதியுள்ளதால் கவர்னரின் பணி பாதிக்கபட்டுள்ளது எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற ஆளுநர் அலுவலக ஆணைக்கிணங்க இன்று காவல்துறை அவரை கைது செய்து அவர் மீது 124 என்ற பிரிவின் கீழ் தேச விரோத வழக்கு பதிவு செய்யப்பட்டது விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். இது தமிழக அரசியலில் கடுமையான எதிர்ப்பை உண்டாக்கியது,நக்கீரன் கோபால் கைதை கண்டித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர்.நக்கீரன் கோபாலை விடுதலை […]
நக்கீரன் கோபாலை சந்திக்க விடாமல் மதிமுக பொது செயலாளர் வைகோ அனுமதி மறுக்கப்பட்டு சிந்தாரி பேட்டை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து நக்கீரன் கோபாலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.நக்கீரன் கோபாலை சந்திக்க முயன்ற மதிமுக பொது செயலாளர் வைகோவை அங்கே உள்ள காவல்துறையினர் தடுத்து நிறுத்த்னர்.இதனால் மதிமுக பொது செயலாளர் வைகோ காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியதாவது , காவல்துறையையும் , நீதித்துறையையும் கேவலப்படுத்திய பாரதீய ஜனதா கட்சியின் […]
சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளா் நக்கீரன் கோபாலை காவல்துறையினர் கைது செய்தனர். நக்கீரன் பத்திரிக்கையின் மூத்த ஆசிரியர் நக்கீரன் கோபால் ஆவார்.இவர் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து புனே செல்வதற்காக விமான நிலையம் வந்தார்.அப்போது திடீரென்று அங்கு வந்த காவல்துறையினர் நக்கீரன் கோபாலை கைது செய்தனர்.நக்கீரன் கோபாலை காவல்துறையினர் கைது செய்ததற்கு ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த புகார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. பத்திரிக்கையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது