BJP: மக்களவை தேர்தலுக்கான தமிழக பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் திருநெல்வேலியில் போட்டியிடுகிறார் என பாஜக தலைமை மாற்றியுள்ளது. Read More – சென்னையில் பாஸ்பரஸ் வெடித்து +2 மாணவன் உயிரிழப்பு! அதிர்ச்சி சம்பவம் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக, அதிமுக உள்ளிட்ட […]
இன்று தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கடந்த 13ஆம் தேதி திருப்பி அனுப்பி இருந்தார். அந்த மசோதாக்களை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு மீண்டும் ஒப்புதலுக்காக அனுப்ப தனித்தீர்மானம் கொண்டு வர இன்று சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மீண்டும் நிறைவேற்றப்படும் மசோதாக்களில் முக்கிய மசோதாக்களில் ஒன்று துணை வேந்தர்களை அரசின் ஒப்புதலோடு நியமிப்பது. இது தொடர்பாக […]
தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து,கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும்,,காவல்துறை மரணங்கள் அதிகரித்துள்ளது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜகவினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில்,சென்னை வள்ளுவர் கோட்டத்தில், மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலும், கோவையில் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம் பாஜக எம்எல்ஏ […]
தமிழக பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தேர்வு. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக 20 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வென்றிருந்தது. அதன்படி, கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர்.காந்தி, மொடக்குறிச்சி தொகுதியில் சி.கே.சரஸ்வதி ஆகியோர் எம்.எல்.ஏக்களாக வெற்றி பெற்றுள்ளனர். இந்த நிலையில், சென்னை தியாகராயநகரில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி தலைமையிலான […]
பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக பாஜக மாநில தலைவர் எல் முருகன் தலைமையை சந்திக்க டெல்லி சென்றுள்ளார். ஆகையால், பாஜகவின் வேட்பாளர் பட்டியல் இன்று இரவு அல்லது நாளை கண்டிப்பாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் இன்று காலை சரியாக 11 மணியளவில் […]
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மூன்று மாணவர்கள் ஜோதிஸ்ரீதுர்கா, ஆதித்யா மற்றும் மோதிலால் ஆகியோர் நேற்று அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியது. தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருவதாகவும், இதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல தலைவர்கள் மற்றும் பெற்றோர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்நிலையில், தமிழக மாணவர்கள் நீட் தேர்வால்தான் இறக்கிறார்கள் என்ற ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை எதிர்கட்சிகள் வைக்கிறார்கள் என […]
பாஜகவில் இருந்து நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுகவிற்கு வந்தால் ஏற்றுக் கொள்வோம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நயினார் நாகேந்திரன் முதலில் அதிமுகவில் இருந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.இதன் பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.தற்போது தமிழக பாஜகவில் மாநில துணைத் தலைவராக உள்ளார்.சமீபத்தில், நயினார் நாகேந்திரன்,தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, பாஜகவில் தாம் மனவருத்தத்தில் இருப்பதாகவும், கட்சித் தலைமை மீது வருத்தத்தில் இருந்தாலும் தான் கட்சி மாறப்போவதில்லை என்று கூறினார். இந்த […]
தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, பாரதிய ஜனதா கட்சியில் தாம் மனவருத்தத்தில் இருப்பதாகவும், கட்சித் தலைமை மீது வருத்தத்தில் இருந்தாலும் தான் கட்சி மாறப்போவதில்லை என்று மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். இந்த செய்தி பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நண்பர்களே என் கருத்தை தெளிவாக படிக்கவும். என் கோபம் பாஜக வை விட்டு செல்பவர்களுக்கு எதிரானது. வருத்தம் உள்ளதா […]