கன்னியாகுமரி : தமிழக மின்சாரவாரியம் நாளை ஆகஸ்ட் 02/08/2024 கன்னியாகுமரியில் பல இடங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்புபணி காரணமாக நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள். நாகர்கோவில் பெருவிளை, ஆசாரிபள்ளம், பார்வதிபுரம், அலம்பரை ஆகிய இடங்களில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். தடிக்காரன்கோணம் கிரிபாரி, கடுக்கரை, பூதபாண்டி காலை ஆகிய பகுதிகளில் 8 மணி முதல் […]
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 44வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் நவீன் என்பவர், கொலை மிரட்டல் விடுப்பதாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து நேசமணி நகர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த புகாரில், கார் மூலம் இடிக்க முயன்றதாகவும், கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மேயர் மகேஷ் தரப்பு கொடுக்கப்பட்ட புகாரில் தகவல் கூறப்பட்டுள்ளது. அதாவது, நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் பகுதியில் மேயர் மகேஷ் […]
நாகர்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில், மதிய உணவு சாப்பிட்ட 26 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பள்ளியில் இன்று மத்திய சாப்பாடு, பருப்புக்குழம்பு மற்றும் முட்டை பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. இதை சாப்பிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை மற்றும் காவல்துறைக்கு பள்ளி நிர்வாகம் தரப்பில் தகவல் […]
நாகர்கோவில் மாநகராட்சியின் துணை மேயர் பதவிக்கு திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் மேரி பிரின்சி வெற்றி பெற்றுள்ளார். திமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர் மேரி பிரின்சி 28 வாக்குகளும், போட்டி வேட்பாளர் ராமகிருஷ்ணன் 24 வாக்குகளும் பெற்றனர். இதில் 4 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் வேட்பாளர் மேரி பிரின்சி வெற்றி பெற்றுள்ளார். மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், […]
நாகர்கோவிலில் யூதிஷா என்ற மாணவி 230 திருக்குறள்களை 3 நிமிடம் 25 விநாடிகளில் ஒப்புவித்து உலக சாதனை படைத்துள்ளார். நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலகசாதனைக்காக நிர்ணயிக்கப்பட்ட 5 நிமிடங்களில் அதிவேகமாக திருக்குறள்களை ஒப்புவிக்கும் போட்டி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் முன்னிலையில் நடைபெற்ற இந்த போட்டியில் யூதிஷா என்ற மாணவி 230 திருக்குறள்களை 3 நிமிடம் 25 விநாடிகளில் ஒப்புவித்து உலக சாதனை படைத்துள்ளார். […]
நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.இந்த வார்டில் நேற்று ஒரே நாளில் 5 பேர் அனுமதிக்கப்பட்டன. அவர்களில் 8 மாத குழந்தை , இரண்டு ஆண்கள் , இரண்டு பெண்கள் ஆவர். கடந்து பத்து நாட்களுக்கு முன் 8 மாத குழந்தை தன் பெற்றோருடன் துபாயிலிருந்து குமரி மாவட்டத்திற்கு வந்துள்ளனர். குழந்தை உட்பட 5 பேரின் இரத்தம் மற்றும் சளி மாதிரியை பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு […]