சென்னை: மறைந்த நாகை எம்பி செல்வராஜ் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினரும், இந்திய கம்யூனிட்ஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான செல்வராஜ் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று சென்னையில் காலமானார். சென்னையில் உயிரிழந்த அவரது உடல், சொந்த ஊரான சித்தமல்லியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நேற்று முதல் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் வரிசையாக வந்து அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று குடும்பத்தினர் இறுதி சடங்கு நடத்தினர். அதன்பின், 21 குண்டுகள் முழங்க காவல்துறை […]