ஓசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்ததகாவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஓசூர் அருகே நாகமங்கலத்தில் பெங்களூரு நோக்கி சென்ற தனியார் பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், 3 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக வனப்பகுதியில் இருந்து தமிழக பகுதிக்குள் நுழைந்த காட்டுயானைகளை கட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் முயன்று வருகின்றனர். கர்நாடகா வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் மொத்தமாக வெளியேறி அந்த காட்டு யானைகள் தமிழக பகுதிக்குள் நுழைந்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் பதற்றத்தில் உள்ளனர். தமிழக பகுதியான ஓசூர், நாகமங்கலம் ஏரி பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முக்காட்டுள்ளன. தகவலறிந்து வந்த தமிழக வனத்துறை அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுத்து பட்டாசு வெடித்து யானைகளை மீண்டும் வனத்திற்குள் விரட்டி வருகின்றனர்.