நாகாலாந்து இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!

நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் உள்ள தபி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 7-ஆம் தேதி அன்று முடிவடைந்தது. 23 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. சுமார் 96 சதவீத வாக்குகள் பதிவானது. 15,256 வாக்காளர்களில் 96.25 சதவீதம் பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதில் 7,788 ஆண்களும் 7,468 பெண்களும் அடங்குவர். இந்த தேர்தலுக்கான முடிவுகள் இன்று அதாவது டிசம்பர் 3 ஆம் … Read more

நாகலாந்து துப்பாக்கி சூடு : ராணுவத்தினர் மன்னிப்பு – உள்துறை அமைச்சர் அமித்ஷா!

நாகலாந்து துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ராணுவத்தினர் மன்னிப்பு கோரியதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். நாகலாந்து மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை இராணுவத்தினர் தீவிரவாதிகள் என நினைத்து பொது மக்கள் மீது நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கருத்துக்கள் மற்றும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நாகலாந்து துப்பாக்கிச்சூடு … Read more

ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் – நாகலாந்து முதல்வர்!

நாகலாந்தில் அமல்படுத்தியுள்ள ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என நாகலாந்து முதல்வர் நெய்பியு ரியோ கூறியுள்ளார். நாகலாந்து மாநிலத்தில் சனிக்கிழமை இரவு தீவிரவாதிகள் என நினைத்து  பொதுமக்கள் சென்ற வாகனத்தின் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனை தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில் ராணுவ வீரர் உட்பட இருவர் பலியாகினர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதுகுறித்து நாகலாந்து முதல்வர் நெய்பியு … Read more

நாகாலாந்தில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது…!

சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் மோன் மாவட்டத்தில் இணைய  மற்றும் குறுஞ்செய்தி சேவை முடக்கப்பட்டுள்ளது. நாகாலாந்தில் உள்ள மோன் மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று மாலை பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடத்தினர். அப்போது அருகில் உள்ள நிலக்கரித் தொழிற்சாலையில் வேலையை முடித்து விட்டு அபோகுதியில் உள்ள கிராம இளைஞர்கள் பிக்-அப் டிரக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் தவறுலதாக பாதுகாப்புப் படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. … Read more

பரபரப்பு: நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு; 13 பேர் கொல்லப்பட்டனர்..!

நேற்று நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பொது மக்கள் உயிரிழந்தனர்.  நாகாலாந்தில் உள்ள மோன் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பொது மக்கள் உயிரிழந்தனர். அசாம் ரைஃபிள்ஸ் பாதுகாப்புப் படையினருக்கு மோன் மாவட்டத்தி தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று மாலை பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடத்தினர். அப்போது அருகில் உள்ள நிலக்கரித் தொழிற்சாலையில்  வேலையை முடித்து விட்டு அபோகுதியில் உள்ள கிராம இளைஞர்கள் … Read more

சிக்கிம், நாகாலாந்து, திரிபுராவுக்கு காங்கிரஸ் பொறுப்பாளர் நியமனம் – தலைமை அறிவிப்பு!

சிக்கிம், நாகாலாந்து மற்றும் திரிபுராவின் காங்கிரஸ் பொறுப்பாளரை நியமனம் செய்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். சிக்கிம், நாகாலாந்து மற்றும் திரிபுராவின் காங்கிரஸ் பொறுப்பாளராக அஜோய் குமாரை நியமனம் செய்து, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். அஜோய் குமார் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். 15 வது மக்களவையில், ஜாம்ஷெட்பூர் மக்களவைத் தொகுதியின் எம்.பி. அவர் இந்திய தேசிய காங்கிரசின் தேசிய செய்தி தொடர்பாளர். அவர் ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கமிட்டியின் … Read more

நாகலாந்தில் ஜூன் 30ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு!

நாகலாந்தில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக அம்மாநில அரசு ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பெருமளவில் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவுகள் கடுமையாக விதிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆங்காங்கு உள்ள நிலைமைக்கேற்ப ஊரடங்கு தளர்வு விதிக்கப்பட்டு வருகின்றது. அது போல நாகலாந்து மாநிலத்தில் … Read more

சளிப்பிடித்ததால் தனியாக முகக்கவசம் அணிந்து மருத்துவமனைக்கு வந்த 3 வயது குழந்தை..!

பெற்றோர் வேலைக்கு சென்றதால் அவர்களுக்கு தொந்தரவு அளிக்காமல் 3 வயது சிறுமி தனக்கு சளிப்பிடித்த காரணத்தால் தன்னந்தனியாக மருத்துவமனைக்கு வந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் வருமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும், இதில் சிறியவர்கள் பெரியவர்கள் என்றும் பலரும் பாதிக்கப்படுகின்றனர். இதன் விழிப்புணர்வை உணர்ந்த சிறுமிக்கு சளி தொந்தரவு இருந்ததால் ஆரம்ப சுகாதார மையத்திற்கு தனியாக சென்று சோதனை செய்துகொண்டார். நாகாலாந்து மாநிலத்தில் … Read more

நாகலாந்தில் மே 14 முதல் ஏழு நாட்களுக்கும் முழு ஊரடங்கு அமல்!

நாகலாந்து மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக வருகிற மே 14ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. குறிப்பாக பல்வேறு மாநிலங்களில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் மாநில அரசுகள் திணறி வருகிறது. எனவே கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் பல்வேறு  அமல்படுத்தி … Read more

#BREAKING: நாகாலாந்தில் நிலநடுக்கம்!

4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நாகாலாந்தில் ஏற்பட்டுள்ளது. நாகாலாந்தின் டுயென்சாங் அருகே 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று  காலை 10 மணியளவில் ஏற்பட்டது என்று நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மையப்பகுதியின் அடியில் 10 கி.மீ ஆழத்தில் ஆழத்தில் ஏற்பட்டதுல். மேலும், இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இந்த நிலநடுக்கமானது யென்சாங், ஜுன்ஹெபோடோ, பெக், மோகோக்சாங், வோகா, மோன் மற்றும் கோஹிமா ஆகிய நகரங்களில் உணரப்பட்டுள்ளது.