நாகை மாவட்டத்தில் கடும் பனி பொழிவால் சம்பா நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். நாகை, மயிலாடுதுறை, செம்பனார்கோயில், தரங்கம்பாடி, பொறையாறு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. காலை 8 மணி வரை பனி சூழ்ந்து காணப்படுகிறது. அருகில் உள்ள கட்டிடங்கள் தெரியாத அளவில் பனிப்பொழிவு இருந்ததால், கடும் குளிர் நிலவியது. இதனால் அதிகாலையில் நடைபயிற்சி செல்பவர்கள் சிரமப்பட்டனர். மூடு பனி நிலவுவதால், சம்பா நெற்பயிர்களில் பூச்சி தாக்குதல் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. […]
தரங்கம்பாடி அருகே வறுமையிலும் ஆதரவற்ற முதியவர்களுக்கு தினமும் உணவு வழங்கி வரும் இளைஞருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். நாகை மாவட்டம் பெரம்பூரைச் சேர்ந்தவர் பாரதிமோகன். கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர், தனது வீட்டிலேயே உணவு சமைத்து, அதனை பூம்புகார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன்கோயில், சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளில் உள்ள ஆதரவற்ற முதியவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறார். மேலும் இவருக்கு முகநூல் நண்பர்களும் […]
நாகை மாவட்டத்திற்கு லாரிகள் மூலம் வந்துள்ள பல்வேறு நிவாரணப்பொருட்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கஜா புயலால் பாதிக்கப்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நாகப்பட்டினத்திற்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் லாரிகள் மூலம் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அவ்வாறு வரவழைக்கபட்ட பொருட்கள் அனைத்தும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்களை பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு விநியோகம் செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.சோப்பு, பால் பவுடர், பிஸ்கட், அரிசி என அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி […]
சொந்த உறவுமுறையில் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார். நாகையில், மத்திய அரசின் ராஷ்டிரிய யோஜனா திட்டத்தின்கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றிய ஓ.எஸ்.மணியன், குழந்தைகள் ஊனமாக பிறப்பதற்கு முக்கிய காரணம் சொந்த உறவு முறையில் திருமணம் செய்து கொள்வதுதான் என்றும், இது அறிவியல் ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனால், சொந்தத்தில் திருமணம் செய்வதை அனைவரும் தவிர்க்க வேண்டும் […]
சென்னையில் இருந்து சென்ற அரசு பேருந்து மீது நாகைப்பட்டினம் அருகே உள்ள சீர்காழி புறவழிச்சாலையில் கல்வீச்சு நடந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலில் ஓட்டுநர் காயமடைந்துள்ளார்.பின்னர் பேருந்தில் இருந்த பயணிகள் மாற்று பேருந்து மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்
நாகைப்பட்டினம் : வேதாரண்யம் விவசாயிகளின் 22நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். விவசாயிகளுடன் வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மைதுறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து விவசாயிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.