நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள மாந்தை என்ற இடத்தில் மலிவாகக் கிடைக்கும் மது பாட்டில்களை கடத்துவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர், அந்த வழியே வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அப்போது 32 அட்டை பெட்டிகளில் 1536 மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தின் ஓட்டுநர் ராஜ் என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். […]
பழுதடைந்த நாகை – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் மோசமான நிலையில் இருந்து வந்த நிலையில், 17 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கல் பண்டிகைக்குள், நாகை – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை, வாகன ஓட்டிகள் பயன்பாட்டுக்கு வரும் என்று நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் கூறியுள்ளார்.
கடந்த மாதம் கஜா புயல் டெல்ட்டா மாவட்டங்களை கோரத்தாண்டவம் ஆடியது.குறிப்பாக தஞ்சை , நாகை மற்றும் புதுகோட்டை ஆகிய மாவட்டங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் சிக்கிய டெல்ட்டா பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டுட்க்க தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து அரசியல் கட்சிகள் , பல்வேறு அமைப்புகள் , மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் […]
நாகை: தங்கமீன் விடும் விழாவை முன்னிட்டு அமைச்சர் ஜெயக்குமாரை கடலுக்கு தூக்கிச்சென்று மீனவர்கள் ஆரவாரம் செய்தனர். நாகை மாவட்டம் நம்பியார்நகர் மீனவ குலத்தில் பிறந்த அதிபக்த நாயன்மார். 63 நாயன்மார்களில் ஒருவரான இவரை சிவபெருமானிடம் பக்தி கொண்டு தான் பிடிக்கும் முதல் மீனை சுவாமிக்காக கடலில் விடுவது வழக்கம். இவரது பக்தியை சோதித்த சிவபெருமான் இவரது கையில் தங்க மீன் ஒன்றை கிடைக்கும்படி செய்தார்.அதிபக்தநாயனார் அம்மீனையும் சிவபெருமானுக்காக வேண்டிக்கொண்டு கடலில் விட்டார்.தங்கமீன் விடும் விழா அதிபக்தநாயனாரின் தெய்வ […]
மீனவர் பிரச்னைக்கு தீர்வுகாண இந்தியா – இலங்கை இடையே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடத்தப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைக்கு இலங்கை முட்டுக்கட்டையாக இருப்பதாக குற்றம்சாட்டினார். இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் 163 விசைப்படகுகள் விரைவில் மீட்கப்படும் என்று கூறிய அமைச்சர், மீட்க முடியாத படகுகளுக்கு மாற்று படகுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார். இரு நாட்டு மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாம் தயாராக […]
நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் அருகே உள்ள மணியன் தீவு கடற்கரையில் இலங்கையை சேர்ந்த பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இப்படகானது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகா என கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிரமாக விசாரணை செய்துவருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவிற்கு உட்பட்ட சங்கரன்பந்தல் மருத்துவமனை ஆகும். இங்கு சுமார் 24 கிராம மக்களின் மருத்துவ சேவை மையமாக உள்ளது சுமார் 50 வருடங்களாக இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது. ஆட்சிகள் மாறினாலும் இந்த மருத்துவ மனைகளின் காட்சிகள் மாறுவதில்லை. இந்த மருத்துவ மனையில் கட்டப்பட்ட கட்டிடங்கள் மிகவும் பழடைந்து நிலையில் காணப்படுகின்றன. உள்ளிருக்கும் இரும்பு மற்றும் சிமெண்ட் செகில்கள் கீழே விழும் நிலையில் ஆபாய காட்சியாகவே காணப்படுகின்றன. இவற்றை மறு சீரமைப்பு செய்யும் […]