ஜாவத் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததன் காரணமாக,நாகை,பாம்பன் துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் மாலை புயலாக வலுப்பெற்றது. அதற்கு ஜாவத் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல், வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடற்பகுதியை நெருங்கி, இன்று காலை ஒடிசாவின் புரி அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து […]