ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களான நாக சைதன்யா – நடிகை சோபிதாவின் திருமணம் இன்று பிரமாண்டமாக நடந்து முடிந்தது. ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மண்டபத்தில் ஏஎன்ஆரின் சிலை முன் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடந்தது. தற்பொழுது, திருமண விழாவின் போது, மணமக்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர்களுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்களது திருமணம் சுமார் 8 மணிக்கு நடைபெற்றதாக தகவல்கள் […]