20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தல். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையிலிருக்கும் 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் எதிர்க்கட்சியாக இருந்தபோது காட்டிய ஆர்வத்தை தற்போது திமுக அரசு காட்டவில்லை என குற்றசாட்டினார். 20 ஆண்டுகளுக்கு […]
தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசும் சீமானை குண்டாசில் கைது செய்ய வேண்டும் என கே.எஸ் அழகிரி ட்வீட். இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சமீபத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியையும், சோனியா காந்தியையும் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி, தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் வகையில் சீமான் பேசி வருகிறார் என்று குற்றசாட்டியுள்ளார். இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் […]
நாம் தமிழர் என்பது ஒரு கட்சியின் பெயரல்ல, அது நமது இனத்தின் அடையாளம் என்று அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரை. உள்ளாட்சித் தேர்தல் மட்டுமின்றி அனைத்து தேர்தல்களிலும் நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம் என்றும் நாம் தமிழர் கட்சி மக்களுக்கானது எனவும் அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021ல் போட்டியிடும் கள்ளக்குறிச்சி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், தேர்தலில் வேட்பாளராக […]
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலும்,உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 15 ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது.வரும் 22 ஆம் தேதியோடு வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைய உள்ள […]
திராவிடம் வரலாறுதான் தமிழர் வரலாறு என்று கூறுவதை ஏற்க முடியாது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு. சமூக நீதி என்றால் என்ன? மக்களுக்கு திமுக செய்த சமூக நீதி என்ன என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக நீதிக்காக பெரியார் மட்டுமே போராடினர் என்பதை நான் எதிர்க்கிறேன் என்றும் தெரிவித்தார். திராவிடம் வரலாறுதான் தமிழர் வரலாறு என்று கூறுவதை […]
மரபணு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள பச்சிளங்குழந்தையின் உயிரைக் காக்குமாறு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என சீமான் கோரிக்கை. இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள செய்தியில், தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சிராஜ்பூர் பகுதியினைச் சேர்ந்த ஜெகதீஷ், எழிலரசி இணையரின் மகளான 21 மாதமேயான பாரதி எனும் பச்சிளங்குழந்தைக்கு முதுகுத்தண்டுவட தசைநார் சிதைவு (SMA) வகை 2 எனும் அரியவகை மரபணு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள செய்தியறிந்து பெரும் மனவேதனையடைந்தேன். முதுகுத்தண்டுவட தசைநார் சிதைவு (SMA) […]
நாம் தமிழர் கட்சி சார்பில் 10 லட்சம் பனை விதைகள் நடும் விழாவினை துவக்கி வைத்தார் சீமான். நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழகம் முழுவதிலும் இன்று ஒரே நாளில் 10 லட்சம் பனை விதைகளை நடுவதற்கு நாம் தமிழர் கட்சியினர் முடிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு இதே போல லட்சக்கணக்கில் பனவிதைகளை இவர்கள் நட்டு இருந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டும் அதன் தொடர்ச்சியாக பனை விதை நடும் நிகழ்வு நடந்து வருகிறது. இந்நிலையில் நாம் தமிழர் […]
ஆன்லைன் மது விற்பனைக்கும் தடை விதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து 43 நாள்களுக்கு பிறகு தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் நிபந்தனையின் பேரில் இயங்க அனுமதி வழங்கியது. ஆனால், நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை என கூறி மனு தொடரப்பட்டது. […]
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்தது.ஆனால் இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதனைக்கண்டித்து போராட்டங்கள் மிகவும் தீவிரகமாக நடைபெற்றது.ஒரு புறம் ஆதரவாகவும் போராட்டம் நடைபெற்றது.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்திலும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. அந்த வகையில் தான் கோவை மாவட்டத்தில் உள்ள ஆத்துப்பாலத்தில் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி […]
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதில் தமிழகம் கொரோனா பாதிப்பில் 2-ஆம் இடத்தில் உள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கை கடுமையாக பின்பற்றுவது, பொதுமக்களின் சமூக இடைவெளி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது என அரசு தீவிர முயற்சி எடுத்துவருகிறது. இந்நிலையில் சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்த நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும் கபசுர குடிநீரை பருகவும் மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இந்நிலையில், சிவகங்கை மாவட்டம், […]
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேதி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசையும், முதல்வரையும் விமர்சித்து பேட்டியளித்ததாக கூறி தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யவும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும் சீமான் மனு அளித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சீமான் மீது தொடரப்பட்ட வழக்குக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார். […]
நாம் தமிழர் கட்சி மாநில இளைஞர் அணியை சேர்ந்த துரைமுருகன் என்பவர் தனது நண்பர்களுடன் ஸ்ரீபெரும்புதூர் சென்றுள்ளார். அங்குள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் உள்ள நினைவு தூண் அருகே நின்று டிக்டாக் வீடியோவை எடுத்துள்ளார். அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார்.இந்த வீடியோவால் சர்ச்சை ஏற்பட்டது.இதுதொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ் ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரில் நாம் தமிழர் கட்சி மாநில இளைஞர் அணியை சேர்ந்த […]
சீமான் செய்த செயல் காண்போரை கண் கலங்க வைத்த சம்பவம். சீமானுக்கு நெருங்கிய தொடர்பில் இருந்தவருக்கு ஏற்பட்ட சோகம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள எருக்கூர் அருகே இருக்கும் தில்லை பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு என்கிற அன்புசெழியன் ஆவார்.இவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இருப்பினும் சீமானின் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களில் அன்பு செழியனும் ஒருவர் ஆவார்.இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த அன்பு செழியன் எதிர்பாராதவிதமாக உயிரிழந்துள்ளார். இவரது […]
சீமான் நாங்குநேரி ,விக்கிரவாண்டி,புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளும் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற 21-ஆம் தேதி நாங்குநேரி ,விக்கிரவாண்டி,புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் உள்ளிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்துள்ளது.தற்போது தேர்தல் நெருங்க உள்ள நிலையில் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நாங்குநேரி ,விக்கிரவாண்டி,புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளும் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி 40 தொகுதியில் போட்டியிட உள்ளனர். அதில் 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர் நிறுத்த நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பை கட்சி சார்பில் வெளியிடப் பட்டுள்ளது. இந்தியாவில் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர். இந்நிலையில் திமுக நேற்று தங்கள் போட்டியிடும் தொகுதிகளை வெளியிட்டுள்ளனர். அதே நேரத்தில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் […]