தனது அரசியல் சுற்றுப்பயணத்திற்கு “நாளை நமதே” என பெயரிட்டுள்ளார் நடிகர் கமல ஹாசன்.மேலும் அவர் கிராமங்களை தத்தெடுத்து முன்மாதிரியாக மாற்றப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.நான் பெயரிட்டுள்ள “நாளை நமதே” என்னும் பெயர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை நினைவுப்படுத்தினாலும் பரவாயில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இவர் தனது அரசியல் பயணத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அப்துல்கலாம் நினைவிடத்தில் இருந்து துவங்க போவதாகவும் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.