சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) முதல் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28 (இன்று) சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெறுகிறது. கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் 2000கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளார்கள். பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் அழைப்புக் கடிதம் மற்றும் தலைமைக் கழகத்தின் அடையாள அட்டையுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். முதல் பொதுக்குழு கூட்டம் இது என்பதால் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதற்கிடையில், த.வெ.க. பொதுச்செயலாளர் என். ஆனந்த், சென்னை […]