சந்திரயான்-1ஐ விட சந்திரயான்-2 நிலவின் தரைப்பரப்பை மிக துல்லியமாக படம் எடுத்து அனுப்பும் என்று மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,நிலவின் பாதுகாப்பான இடத்தில் தான் சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கும். இடம் பாதுகாப்பாக இல்லையெனில் ஒரு சில மீட்டர் முன்னோக்கி அல்லது பின்னோக்கி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சந்திரயான்-1ஐ விட சந்திரயான்-2 நிலவின் தரைப்பரப்பை மிக துல்லியமாக படம் எடுத்து அனுப்பும். நிலவில் என்னென்ன […]
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆய்வு செய்வதற்காக ராக்கெட் மூலம் சந்திராயன் விண்கலத்தை கடந்த திங்கள்கிழமை ஏவியது. இந்த நிலையில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நிலவிற்கு மனிதன் செல்ல சர்வதேச அளவில் 4 வருடங்களாக ஆய்வு நடைபெற்று வருகிறது. உலகம் அழியும் நிலையில் மனித இனத்தை காப்பாற்றும் இடமாக நிலவு இருக்கும்.சந்திரயான்-2 வெற்றி என்பது செப்டம்பர் 7-ஆம் தேதி தான் தெரியும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
சந்திரயான் – 1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நிலவு குறித்த ஆய்வில் சந்திரயான் உலகத்திற்கே முன்னோடியாக உள்ளது.மனிதன் செல்ல நீண்ட நாட்களாகும் என்பதால் தொழில்நுட்பம் மூலம் நிலவை ஆய்வு செய்ய முடியும். பூமியைவிட மாறுபட்ட ஈர்ப்புவிசை உள்ள நிலவில் ஆய்வு செய்வது சவாலான பணியாகும். சந்திரயான் – 2 ரோவர் வாகனத்தை இறக்கி சோதனை செய்ய சேலம் பகுதியிலிருந்து மாதிரி மண் பெறப்பட்டது. ஒரு மாதத்தில் 14 நாட்கள் மட்டுமே நிலவில் விண்கலன்கள் […]