உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஒரு பெண் அவளுடைய கணவர் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். சிறையில் இருக்கும் தனது கணவர் பக்ரீத் பண்டிகையின் போது தனக்கு புது ஆடை வாங்கி வருமாறு கூறியுள்ளார். ஆனால் அப்பெண் பக்ரீத் பண்டிகையின் போது புது ஆடை வாங்கி செல்லாததால் இதைத் தொடர்ந்து அப்பெண்ணின் கணவன் முத்தலாக் கூறி விவாகரத்து அளித்துள்ளார். குறித்த பெண் கூறுகையில் , பக்ரீத் பண்டிகைக்கு புதிய ஆடை வாங்கி வருமாறு […]
உத்திரபிரதேசத்தில் மாநிலம் ஜகான்ஹிராபாத் பகுதியை சார்ந்த ஷாஹே ஆலம் என்பவர் ருக்சனா பனோ என்பவரை கடந்த 13-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு முன் ருக்சனா பனோ குடும்பத்தினர் இரு சக்கர வாகனம் வாங்கி தருவதாக கூறினார். ஆனால் திருமணம் ஆகியும் இருசக்கர வாகனம் வாங்கி தராததால் திருமணமான 24 மணி நேரத்தில் ருக்சனாவுக்கு முத்தலாக் கூறி ஷாஹே ஆலம் விவாகரத்து செய்தார்.இதனால் அதிர்ச்சியடைந்த ருக்சனா பனோ தந்தை வரதட்சணை கொடுமை சட்டத்திற்கு கீழ் ஆலம் மற்றும் […]
நாளை மக்களவையில் ‘முத்தலாக்’ மசோதா மீது விவாதம் நடத்தப்படும் என்பதால் பா.ஜனதா எம்.பி.க்கள் தவறாமல் ஆஜராக வேண்டுமென்று கொறடா உத்தரவிட்டுள்ளார். முஸ்லிம் பெண்களின் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின்படி ‘முத்தலாக்’ முறையில் மனைவியை விவாகரத்து செய்வது சட்டவிரோதம் என்றும் முத்தலாக் முறையில் மனைவியை விவாகரத்து செய்யும் கணவருக்கு 3 வருடங்கள் ஜெயில் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் புதிய சட்டமசோதா மாநிலங்களவையில் சில கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்து வருகின்றது. இந்நிலையில் நிலுவையில் இருந்த முத்தலாக் சட்ட மசோதா நாளை கூடுகிற மக்களவையில் […]