காவலர்கள் முத்துராஜ், முருகனுக்கு கொரோனா தொற்று உறுதி. சாத்தான்குளத்தில் தந்தை – மகன் போலிஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பான காவலர்கள் கைது செய்யப்பட்டு, சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த காவலர்களை விசாரித்த சிபிஐ அதிகாரிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது, காவலர்கள் முத்துராஜ், முருகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
கைது செய்யப்பட்ட காவலர் முத்துராஜ் மருத்துவ பரிசோதனை செய்ய தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கி உயிரிழந்தாக கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த விசாரணையின் அடிப்படையில் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. மேலும் […]
சாத்தான்குளம் தந்தை -மகன் கொலை வழக்கில் தலைமை காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளது. முத்துராஜ் தலைமறைவான நிலையில் தேடப்படும் நபராக சிபிசிஐடி அறிவித்துள்ளது. நேற்று ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் முருகன் ஆகியோரை வருகின்ற 16-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ஹேமா உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காவலர் ரேவதியை தொடர்ந்து சாட்சியாக மாறும் சிறப்பு எஸ்.ஐ.பால்துரை மற்றும் காவலர் முத்துராஜ். சிபிசிஐடி போலீசார் நேற்று காலை தந்தை, மகன் வழக்கு தொடர்பான விசாரணையை தொடங்கியது. சிபிசிஐடி போலீசார் நேற்று முதல் ஜெயராஜ் வீடு, கடை மற்றும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையை தொடர்ந்து இரவு போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, தந்தை, மகன் கொலை வழக்கில் இதுவரை 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமை […]