அதிமுக எம்.எல்.ஏ முத்தமிழ்செல்வனுக்கு கொரோனா தொற்று உறுதி. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரை பலரையும் தாங்கி வருகிறது. இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ முத்தமிழ்செல்வனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.