அல்சைமர் நோய் என்பது ஒரு மூளைக் கோளாறு ஆகும், இது ஒருவரின் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் திறன்களைப் பறிக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே மிக அடிப்படையான பணிகளைக் கூட செய்து முடிக்கும் திறனை இழந்து மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படக் கூடும். சில உண்ணக்கூடிய மற்றும் மருத்துவ குணம் கொண்ட காளான்களில் மூளையின் நியூரானின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோயை உண்டாக்கும் அழற்சி போன்றவற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும் தன்மைகள் […]
அசாமில் உள்ள சாரைடியோ, திப்ருகார், சிவசாகர் மற்றும் டின்சுகியா ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 2 நாட்களில் மட்டும் 13 பேர் தவறுதலாக விஷக் காளான்களை சாப்பிட்டு உயிரிழந்துள்ளதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பிரசாந்த் டிஹிங்கியா அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த நான்கு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 35 நோயாளிகள் காளான் சாப்பிட்டு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 13 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.