“முருகேசன்-கண்ணகி வழக்கின் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது”- சீமான் வரவேற்பு..!
மனிதத்தைக் கொன்று சாதியத்தை நிலைநாட்ட, படுகொலையில் ஈடுபட்ட வன்கொடுமையாளர்களைத் தண்டித்திருக்கும் முருகேசன்-கண்ணகி ஆணவப்படுகொலை தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று சீமான் தெரிவித்துள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி, விருதாச்சலத்தில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த கண்ணகி – முருகேசன் ஆகிய இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்த நிலையில், உறவினர்களால் ஆணவக்கொலை செய்யப்பட்டனர்.இந்நிலையில், மூக்கு,காது வழியாக விஷத்தை ஊற்றி இரண்டு பேரையும் உயிருடன் எரித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய […]