இந்து கடவுள் முருகப்பெருமான் , சூரனை வதம் செய்த சூரசம்ஹார நிகழ்வு வரும் நவம்பர் 18ஆம் தேதி கந்தசஷ்டி திருவிழாவாக முருகனின் அறுபடை வீடுகளில் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்படும். சூரசம்ஹார நிகழ்வை முன்னிட்டு, அறுபடை வீடுகளில் 2ஆம் வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று (ஐப்பசி மாதம் 27ஆம் தேதி) முருகன், வள்ளி, தெய்வானை முன் யாகசாலை நடத்தப்பட்டு கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது. மனிதர்கள் மீது […]
சென்னை வடபழனி முருகன் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், இன்று முதல் பக்தகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கிலும் சென்னை வடபழனி முருகன் கோயிலில் திட்டமிட்டபடி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில் பணியாளர்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 108 சிவாச்சாரியார்கள், கோயில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் மட்டுமே கும்பாபிஷேகம் விழாவில் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் காண்பதற்காக வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. மேலும், வடபழனி முருகன் கோயிலில் இன்று […]
பழனி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு துணை முதல்வர் சுவாமி தரிசனம் செய்தார். கடந்த 15-ஆம் தேதி துவங்கிய முருகன் ஆலய கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு இன்று மாலை திருச்செந்தூர் முருகன் கோவிலில் சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது. இதற்கிடையில், பழனி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா ஐந்தாம் நாளான நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.