சென்னை : திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை , கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று, பாகன் உதயகுமார் மற்றும் பாகனின் உறவினர் சிசுபாலன் ஆகிய இருவரையும் தாக்கியது. இதில் இருவரும் படுகாயமுற்று உயிரிழந்தனர். சாதுவாக கோயிலை சுற்றிவரும் யானை திடீரென ஆக்ரோஷமாக மாறி இருவரை தாக்கிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதில் யானை பாகனின் உறவினர் சிசுபாலன் தான் யானையிடம் செல்பி எடுக்க முயன்றார். அதனால் தான் யானை அவரை தாக்கியது. எனவும் அப்போது […]
பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. தமிழகத்தில் நேற்றுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் ஜனவரி 31-ஆம் தேதி வரை கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகத்தில் ஜனவரி 31-ஆம் தேதி வரை இரவுநேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. அதில், ஜன.14 முதல் 18 வரை […]
முருகப்பெருமானின் 2-வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முக்கிய திருவிழாவான தைப்பூச திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் பெற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானின் 2-வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முக்கிய திருவிழாவான தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை […]
திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுற்று புறத்தில் உள்ள மண்டப மேற்புறசுவர் இடிந்து விழுந்து, ஒரு பெண்மணி உயிரிழந்தார். சிலர் காயமுற்றனர். இறந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. இந்நிலையில் இடிந்து விழுந்த மேற்புற சுவர் மற்றும் சுற்று சுவர் முழுவதும் இடிக்கப்பட்டு கல்மண்டபம் கட்ட கோயில் நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. இதனால், தற்போது அதனை இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குவது திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோயில். இங்கு தான் முருகன் நரகாசூரனை வதம் செய்த இடமாகும். இங்கு நாளிகிணறு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த நாழிக்கிணறு கடலுக்கு மிக அருகாமையில் உள்ளது. ஆனால், இந்த கிணற்றில் நல்ல தண்ணீர் தான் உள்ளது. திருச்செந்தூருக்கு செல்லும் பக்தர்கள் முதலில் கடலில் நீராடிவிட்டு, பின் நாழிகிணறு நீரில் நீராடிய பிறகு முருகனைத் தரிசிக்கச் செல்கிறார்கள். இந்த செயலுக்குப் பின்னால் ஒரு புராண வரலாறு உள்ளது. அது, அசுர குலத்தை சேர்ந்தவர்களான […]