மேற்கு வங்கம் : முர்ஷிதாபாத்தில் உள்ள வீட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியள்ளது. இந்த சம்பவமானது ஞாயிற்றுக்கிழமை இரவு கயர்தலா பகுதியில் நடந்தது எனவும், வெடித்த அந்த வெடிகுண்டுகள் நாட்டு வெடிகுண்டுகள் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. வெடி சத்தம் அதிகமாக இருந்ததால், விபத்து நடந்த வீட்டின் மேற்கூரையும் இடிந்து விழுந்தது. சத்தம் அதிகமாக இருந்த காரணத்தால் உடனடியாக அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவலை கொடுத்தனர். இதனையடுத்து, உடனடியாக […]
மேற்கு வங்கத்தில் சிலைகளை கரைக்க சென்ற 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேற்கு வங்கத்தில் உள்ள முர்ஷிதாபாத்தில் துர்கா சிலைகளை கரைக்க திங்கட்கிழமையன்று இரண்டு படகுகள் சென்றது .சிலைகளை கரைக்க தலா 10 பேரை ஏற்ற சென்ற அந்த இரண்டு படகுகளும் மாலை 5.15 மணியளவில் ஆற்றில் கவிழ்ந்துள்ளது. படகு கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த ஐவரின் உடல்களும் நீரிலிருந்து வெளியேற்றப்பட்டது.