சுமைதூக்கும் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது திண்டுக்கல் நீதிமன்றம். முத்தழகுபட்டியை சேர்ந்த செபஸ்தியாரை முன் விரோதத்தால் கடந்த 2014-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி 10 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொன்றது. வழக்கை விசாரித்த திண்டுக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் அந்தோணி விமல், சின்னப்பராஜ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. அருள் ஆரோக்கிய தாஸ், தங்கம், ஜஸ்டின் தாஸ், ஜான் பிரபாகர், விக்னேஷ் இன்பராஜ், தாமரைக்கண்ணன் ஆகியோருக்கும் […]
பனங்காட்டுப் படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு. பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தில் அடைக்க நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நெல்லையைச் சேர்ந்த சாமித்துரை என்பவரை கொலை செய்த வழக்கில் கடந்த 7ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்டார். தற்போது கோவை சிறையில் இருக்கும் ராக்கெட் ராஜா மீது 5 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், ராக்கெட் […]
ராஜஸ்தானில் கொலை வழக்கில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை குரங்கு திருடி சென்ற வினோதம் சம்பவம் அரங்கேறியுள்ளது. பொதுவாக, ஒரு குற்றத்தைச் செய்து பின்னர் ஆதாரங்களை அழிப்பவர்கள் சட்டத்தின் முன் குற்றவாளிகளாக கருதப்படுகிறார்கள். ஆனால் ஒரு மிருகம் மனிதன் செய்த குற்றத்திற்கான ஆதாரத்தை அழித்துவிட்டால் என்ன செய்வது. அப்படியொரு சம்பவம் தான் அரங்கேறியுள்ளது. அதாவது, ராஜஸ்தானில் ஒரு குரங்கு கொலை வழக்கில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களுடன் தப்பி ஓடியுள்ளது. இது காவல்துறைக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. அந்த ஆதாரத்தில் கொலை ஆயுதம் […]
கடந்த 2015-ஆம் ஆண்டு சேலம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டதில், சந்திரசேகரன், ஜோதிமணி ஆகிய இருவர் இறந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 15 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை பிப்.9ல் நிறைவுபெற்ற நிலையில், கோகுல்ராஜ் ஆணவப் […]
சேலம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி தனது காதலியுடன் திருச்செங்கோடு கோவிலுக்குச் சென்ற கோகுல்ராஜ் நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் முதன்மைக் குற்றவாளியாகக் கருதப்பட்டு, தேடப்பட்டு வந்த நிலையில், 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி நாமக்கல் மாவட்ட சிபிசிஐடி போலீசில் யுவராஜ் சரணடைந்தார். அவரோடு […]
தமிழ்நாட்டை உலுக்கிய பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என்று மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி நாமக்கல் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட நிலையில், மீட்கப்பட்டார். இந்த வழக்கில் யுவராஜ் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு, மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. கடந்த 2019 மே 5 முதல் […]
ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒருவருக்கு இரட்டை ஆயுள் மற்றும் ரூ.16000 அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவண்ணாமலை அருகே போளூரில் கடந்த 2007-ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி நரம்பியல் மருத்துவர் சுப்பையா சென்னை ராஜா அண்ணாமலைப்புறத்தில் கூலி படையினரால் கொல்லப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியிலுள்ள 2.25 ஏக்கர் நிலத்தகராறு தொடர்பாக கூலிப்படையினர் மூலம் நரம்பியல் நிபுணரான மருத்துவர் சுப்பையா கொலை செய்யப்படாத கூறப்பட்டது. பட்டப்பகலில், மக்கள் நடமாட்டமிக்க பகுதியில் நடந்த இந்த கொலை, சிசிடிவி […]
சென்னையில் நடந்த மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி நரம்பியல் மருத்துவர் சுப்பையா சென்னை ராஜா அண்ணாமலைப்புறத்தில் கூலி படையினரால் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக சுப்பையாவின் மைத்துனர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 10 பேரை கைது செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் நீதிபதி இன்று தீர்ப்பு அளிப்பதாக தெரிவித்திருந்தார். இந்த […]
மல்யுத்த வீரர் குமார் கொலைவழக்கில் இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது கூட்டாளிகள் 4 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். ஒலிம்பிக்கில் இரு முறை தங்கம் வென்ற மல்யுத்த வீரர் தான் சுஷில்குமார். மே மாதம் ஆறாம் தேதி டெல்லியில் உள்ள சத்ராசல் அரங்கில் மூத்த வீரர்களுக்கும் இளம் வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் இளம் மல்யுத்த வீரர்களான குமார், அஜய், பிரின்ஸ், அமிர், சாகர் உள்ளிட்ட 5 […]
காதலை எதிர்த்த காரணத்தால் காதலியின் பாட்டி மற்றும் சகோதரனை குத்தி கொலை செய்து விட்டு காதலனும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகாராஷ்டிராவின் மோமின்புராவில் வசிக்கும் 22வயதான மொயின் கான் கடந்தாண்டு நவம்பரில் குஞ்சன் என்ற பெண்ணை இன்ஸ்டாகிராம் வழியாக சந்தித்துள்ளார் . அதனையடுத்து கானை குஞ்சன் தனது குடும்பத்தினருக்கு நண்பர் என்று கூறி அறிமுகப்படுத்தியுள்ளார் . அதனையடுத்து சில நாட்களில் இருவரும் காதல் செய்வதை தெரிந்து கொண்டு குஞ்சன் குடும்பத்தினர் மொபைலை பறித்து விட்டு குஞ்சனை உறவினர் […]
சென்னை மூவர் கொலை வழக்கு தொடர்பாக துப்பாக்கி கொடுத்ததாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ராஜீவ் துபே கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சவுகார் பேட்டையில் உள்ள குடியிருப்பில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்த தலில்சந்த் அவரது மனைவி புஷ்பா பாய், அவரது மகன் ஷீத்தல் சந்த் ஆகிய 3 பேரும் இரவு தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது கைலாஷ் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் குற்றவாளிகள் யார் என […]
சென்னை சூளைமேடு ராதாகிருஷ்ணன் நகர் 2வது தெருவில் வசித்து வருபவர் சந்திரமோகன். இவரது மகன் சதீஷ் சதிஷிற்கு சுகன்யா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும் வீட்டின் மாடியில் உள்ள வீட்டை வாடகைக்கு கொடுப்பதற்காக நாராயணன் என்பவர் இடம் வாடகைக்கு கொடுத்துள்ளார். மேலும் கடந்த சனிக்கிழமை நாராயணனிடம் வீட்டு வாடகை பணத்தை சதீஸ் கேட்டுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாமல் இருந்த நாராயணனால் வாடகை பணம் செலுத்த முடியவில்லை. இதனால் […]
முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா இல்லையா என கனிமொழி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பை சேர்ந்த செல்வன் என்பவர் தண்ணீர் கேன் விற்பனை செய்து வந்தார். இவர், கடந்த 17-ம் தேதி காரில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, நேற்று இளைஞர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தினர். இது குறித்து, பல அரசியல் கட்சியினர் போராட்டமும், கேள்வியும் எழுப்பி வருகினற்னர். அந்த வகையில், […]