மூணாறு நிலச்சரிவில் சிக்கி இன்று 2 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ராஜமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கிய காணாமல் போனவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 10-வது நாளான இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று மீண்டும் 2 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிமென்ட் பாலத்திற்கு அருகிலுள்ள சரளைக்கரையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட அந்த இரண்டு உடல்கள் […]
கேரளா மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வு. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தொடந்து பெய்து வந்த கனமழை காரணமாக ராஜமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி 6-வது நாளாக தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. தற்பொழுது 16 பேர் மாயமாகியுள்ளதால் அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவில் புதையுண்ட தமிழர்களை மீட்பதில் தாமதம் ஏன் என்று சீமான் கேள்வி. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது ட்வீட்டர் பக்கத்தில் மூணாறு நிலச்சரிவு குறித்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியுள்ளார் அதில் அவர் கூறுகையில், கேரள மாநிலத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடிய இடுக்கி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான மூணாறில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றிய 23 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 80 க்கும் மேற்பட்டோர் பெருமழை காரணமாக, கடந்த […]
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் டிடிவி தினகரன் வலியுறுத்தல். கேரளாவில் சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தொடந்து பெய்து வந்த கனமழை காரணமாக ராஜமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. தற்போது நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த நிலச்சரிவில் மாயமான 40-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி […]