சென்னை:மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 12 மினி பேருந்துகளின் இயக்கத்தினை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் உள்ள 210 மினி பேருந்துகளில் 66 மினி பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாகவும், சென்னையில் குறைந்த அளவில் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால், கூடுதலாக மினி பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில்,பொதுமக்களின் பயன்பாட்டிற்காக,சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் […]