கோவை உடையாம்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மருத்துவ கருவிகளை தயாரிக்க 3 ஆயிரம் சதுரஅடியில் தொழில்கூடம் கட்டினார். இதற்கு மாநகராட்சி நிர்வாகம் வரி விதிப்பதற்காக முறைப்படி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தை அணுகினார். வரிவிதிக்கப்பட்டால் தான் அந்த கட்டிடம் அங்கீகரிக்கப்படுவதுடன், வங்கிக்கடன் உள்ளிட்டவற்றுக்கு அணுகமுடியும் என்பதால் அனைத்து ஆவணங்களையும் மாநகராட்சி அலுவலகத்தில் கொடுத்தார். இதற்கான கட்டணத்தையும் அவர் செலுத்தினார். தொழில்கூடத்தை பார்வையிட்டு, வரி விதித்து, அதற்கான புத்தகத்தை வழங்குவதற்காக மாநகராட்சி உதவி வருவாய் அதிகாரி காளம்மாள் (வயது […]