தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.அந்த வகையில், தற்போது 13 நகராட்சி ஆணையர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் காஞ்சிபுரம், மறைமலைநகர், தாம்பரம், பல்லாவரம், கொடைக்கானல் உள்ளிட்ட 13 நகராட்சி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி,கீழ்க்கண்ட மாவட்டங்களுக்கு நியமனம் செய்யப்பட்டவர்கள் பின்வருமாறு: பல்லாவரம் நகராட்சி ஆணையர் – காந்திராஜ், காஞ்சிபுரம் நகராட்சி ஆணையராக – லட்சுமி மறைமலை நகர் – ராஜாராம், பொள்ளாச்சி – தாணு மூர்த்தி, […]
கோவை மாவட்டம் ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் ஆகியோரை இடமாற்றம் செய்து புதிய அதிகாரிகளை நியமித்த தேர்தல் ஆணையம். கோவை மாவட்டம் ஆட்சியர் ராசாமணி, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆட்சியர் ராசாமணி, ஆணையர் சுமித்சரணை தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆளும்கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த புகாரில் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு வந்த பல்வேறு தகவல்களின் அடிப்படையில் இருவரையும் தேர்தல் அல்லாத பணிக்கு இடமாற்றம் செய்ததாக தகவல் […]
திருவள்ளூர் நகராட்சி ஆணையருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் பணிபுரிந்த அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிப்பு பணி நடைபெறுகிறது. மேலும், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அலுவலகம் மூடப்பட்டது.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலைய வாகன காப்பகத்தில் நிறுத்தப்பட்டுள்ள நான்கு சக்கர வாகனங்களை உடனே எடுத்துசெல்லுமாறு திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டார். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது, திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட “பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில்” (நெல்லை புதிய பேருந்து நிலையத்தில்) செயல்பட்டு வரும் வாகன காப்பகத்தில் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் சீர்மிகு நகரத்திட்டத்தின் (SMART CITY SCHEME) கீழ் […]