சென்னை : தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல்நிலை குறித்த தகவல்களை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சற்று நேரத்தில் அறிக்கையாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர், சாதாரண காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாகதகவல் வெளியாகியுள்ளது.