தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக வலம்வந்த மதுரை மோகன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன்மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் மதுரை மோகன். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மதுரை மோகன், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர். தலா 1 கோடி ரூபாய் வேண்டும்.! […]