திருவனந்தபுரம் : வயநாட்டில் கடந்த ஜூலை 30 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மரணமடைந்தோர், உடமைகளை இழந்தோர், வீடுகளை இழந்தோரின் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது கேரள வங்கி. கேரள வங்கி சார்பில் நடத்தப்பட்ட நிர்வாகக் குழுக் கூட்டத்தில், இந்த முடிவை எடுத்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கேரள வங்கி முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்குவதாகவும், கேரள வங்கியின் வங்கி ஊழியர்களும் […]
வயநாடு நிலச்சரிவு : கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் முண்டகை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்னும் 200க்கும் மேற்பட்டோரின் நிலை தெரியாத சூழலில் அவர்களை தேடும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அரசியல் தலைவர்கள் சிலர் நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கி வரும் சூழலில், நடிகர் மோகன்லாலும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். […]
கேரளா : வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். ன்னும் 240 பேரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர். சூரல்மாலா மற்றும் மேப்பாடியில் நிலச்சரிவு காரணமாக இடம்பெயர்ந்த 578 குடும்பங்களைச் சேர்ந்த 2,328 பேர் ஒன்பது நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 4ஆவது நாளாக மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில், மண்ணில் புதைந்துள்ள உடல்களை மீட்க ராணுவம், இஸ்ரோ, வனத்துறை, […]
கேரளா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் (என்ஆர்எஸ்சி) கேரளாவில் ஏற்பட்ட பேரழிவை செயற்கைக்கோள்களால் எடுக்கப்பட்ட உயர் தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இது கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் ஏற்பட்ட விரிவான சேதத்தை வெளிப்படுத்துகிறது. நிலச்சரிவுக்கு முன்னும் பின்னும் இருக்கும் புகைப்படங்கள் சுமார் 86,000 சதுர மீட்டர் நிலம் வழுக்கி, இருவாய்ப்புழா ஆற்றின் குறுக்கே சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு பாய்வதைக் காட்டுகின்றன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் […]
கேரளா : கேரளாவின் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக சூர்யா, ஜோதிகா, கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட சில நடிகர்கள் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி அளித்துள்ளனர். வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 291ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 3வது நாளாக காணாமல் போன 200க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நாடடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் இணைந்து ரூ.50 லட்சம் நிதியை நிவாரணத் தொகையாக வழங்கியுள்ளனர். மேலும், […]
வயநாடு : வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 156ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் முப்படையினரும் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, கனமழை காரணமாக மாநிலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், கடும் பாதிப்புக்குள்ளாகிய வயநாடு மலைப் பகுதிக்கு பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் செல்ல இருந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இடைவிடாத […]
கேரளா : வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 100க்கும் மேப்பட்டோர் பேரை காணவில்லை என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டிற்கு நேரில் சென்று பார்வையிடுவதற்காக இன்று காலை வயநாடு செல்லும் வழியில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சென்ற கார் விபத்தில் சிக்கியது. மஞ்சேரி அருகே அவரது கார் கட்டுபாட்டை இழந்து மீன் கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக […]
வயநாடு : கேரளாவில் இதுவரை இல்லாத வகையில் பேரழிவு நிகழ்ந்துள்ளதாக, முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கேரளா மாநிலம் வயநாட்டில், கனமழை காரணமாக நள்ளிரவில் மூன்று பகுதிகளில் அடுத்தடுத்த நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. தொடர் மழை மற்றும் கடும் பனிமூட்டம் காரணாமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. மேப்பாடி சுகாதார […]
கேரளா : கேரளாவில் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதில், கடும் பாதிப்புக்குள்ளான வயநாடு சூரல்மலையில் முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்காக இந்திய ராணுவம் களத்தில் இறங்கியது. மீட்புப் பணிகள் பாதுகாப்புத்துறை குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தளபதியிடம் பேசி கேட்டறிந்தார். அதிகாலை 2 மணி முதல் 6 மணிக்குள் மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை ஆகிய 3 இடங்களில் பயங்கர நிலச்சரிவு நேரிட்டுள்ளது. இந்த […]
கேரளா : தென்மேற்கு பருவமழை கேரளாவில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக தீவிரமாக பெய்து வருகிறது. கனமழை காரணமாக நேற்று நள்ளிரவில் வயநாடு சுற்றுவட்டார பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ளனர். மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல் மலை ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. சுமார், 70க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முண்டக்கை – சூரல்மலை இடையே இருந்த பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் […]
கேரளா: தென்மேற்கு பருவமழை கேரளாவில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக தீவிரமாக பெய்து வருகிறது. கனமழை காரணமாக நேற்று நள்ளிரவில் வயநாடு சுற்றுவட்டார பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ளனர். கனமழை காரணமாக, வயநாடு முண்டைக்கை பகுதியில் நள்ளிரவு 1 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்ததாக சூரல்மலை பகுதியில் அதிகாலை 2 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் தான் சுமார் 500 குடும்பங்கள் சிக்கியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது . இந்த […]