டவ்-தே புயல் மும்பையில் பலத்த காற்றுடன் கடக்கும்பொழுது மரம் ஒன்று வேகமாக விழுந்துள்ளது. அப்போது அங்கிருந்த பெண் நூலிழையில் உயிர்தப்பிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தென்மேற்கு அரபி கடல் பகுதியில் உருவான டவ்-தே புயல் அதி தீவிர புயலாக மாறி இன்று அதிகாலை குஜராத்தில்,சவுராஷ்டிரா கடற்கரையின் டியு மற்றும் உனா இடையே கரையை கடக்க தொடங்கியது. இதனால் குஜராத், சவுராஷ்டிரா, மும்பை, ராஜஸ்தான், ஆகிய பகுதியில் கனமழை பெய்தது. டவ்-தே புயல் தாக்கம் காரணமாக […]