ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினம் மார்ச் 8-ஆம் தேதி கொண்டப்படுகிறது. அதன்படி இன்று நாடு முழுவதும் உலக மகளிர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் மகளிரை கொண்டாடும் இந்த தினத்தில் பல்வேறு தலைவர்கள் மகளிர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மும்பையில் பெண் காவலர்களுக்கு இனி 8 மணி நேரம் மட்டுமே பணி புரியலாம் என்று போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே அறிவித்துள்ளார். […]