மும்பை துறைமுகத்தில் 125 கோடி மதிப்புள்ள 25 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கப்பலில் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட சிலரையும் போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், தொடர்ந்து அம்மாநில அதிகாரிகள் போதை பொருள் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் […]